Lilypie 2nd Birthday Ticker

Monday, June 11, 2007

சிங்கார சென்னையை நோக்கி ......

பெங்களூரை விட்டு சென்னைக்கு சில நாட்களில் குடிபுகப் போகிறோம். அந்த சந்தோஷ உணர்வுகளை சொல்லவே இந்த தமிழ் பதிவு. மீண்டும் சென்னைக்கு செல்கிறோம் என்ற நினைப்பே என் வயதை நான்கு வருடம் குறைத்து இருக்கிறது. அப்படி என்ன தான் இருக்கிறது, என்பார்கள் சென்னை வெயிலில் மண்டை காய்ந்தவர்கள்.....சொல்ல பல இருக்கிறது...

பொதுவாகவே எனக்கு கடற்கரை மீது ஒரு ப்ரமிப்பு உண்டு. அதிலும், அதிகாலையில் கடற்கரையில் நடப்பது எனக்கு மிகவும் பிடித்தமானது.
கடற்கரையில் தோழிகளோடு ஆட்டம் போட்ட நாட்களை நினைத்து, மறுபடியும் எப்பொது என்று பெருமுச்சு விட்ட நாட்கள் பல...

தி.நகரை பற்றி எழுத வில்லை என்றால் என்னை 147D கூட மன்னிக்காது. காலை
10 மணிக்கு ஆரம்பித்தால் இரவு 9 மணி வரை தொடரும் எங்களுடைய shopping spree. உருப்படியாக ஒன்றும் வாங்கா விட்டலும் பாண்டி பஜார் சரக்குகளை பேரம் பேசி வாங்குவதில் அலாதி ப்ரியம். ஏதோ சாதித்து விட்ட பெருமையொடு சுற்றி வருவோம். சொன்ன விலையில் இருந்து 10 ரூபாயாவது குறைத்து வாங்கினால் தான் நமக்கு திருப்தி. பெங்களூரில் நான் பெருமை படும் படியோ திருப்தி படும் படியோ என் shopping இருந்தது இல்லை :-( .

சென்னையில் இருக்கும் வரை இந்த வெயிலின் அருமை தெரிய வில்லை...
பெங்களூரில் பாதி நாட்களில் வெயிலயே பார்க்க முடியாது. Climate ரொம்ப
மந்தமாக இருக்கும்..காலையில் school செல்லும் எந்த குழந்தையும் (சில நாட்கள் நாங்களும் ;-))குளித்ததற்கான அடையாளமே தெரியாது...எல்லாம் தூங்கி எழுந்த முகத்துடனே செல்லும்.

என் தோழிகளுடன் பழையபடி பேச, சிரித்து, கிண்டல் அடித்து , விளையாட முடியுமா, அதற்கெல்லம் நேரம் இருக்குமா என்று தெரியவில்லை.... இருந்தாலும் பார்க்க வேண்டும் என்று தோன்றினால் உடனே பார்த்து பேச முடியும்... பேசுவதற்கு 2 வருட கதை இருக்கிறது. பெங்களூரில் நான் நட்புடன் பழகியவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அதனால் யாருடனும் பகிர்ந்து கொள்ளாத விஷயங்கள் நிறைய இருக்கின்றன

இதெல்லாம் சரி, ஆனால் கன்னடத்தை குற்றுயிரும் குலை உயிருமாக விட்டு செல்ல தான் மனமில்லை... ம்ம்ம்.....தமிழ் தான் சிக்கி இருக்கிறதே இனி அதை கொலை செய்வோம்.

0 Comments: